தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்” படம் எப்படி இருக்கு...? ரசிகர்களின் கமெண்ட்ஸ் என்ன..?

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்” படம் எப்படி இருக்கு...? ரசிகர்களின் கமெண்ட்ஸ் என்ன..?
Published on
Updated on
1 min read

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியானது. படத்தின் முதல் காட்சிக்காக நள்ளிரவு என்றும் பாராமல் விஜய் ரசிகர்கள் திரையரங்குகளின் முன்பு ஆரவாரத்துடன் குவிந்தனர். ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது என்றே சொல்லலாம். 

இந்நிலையில் அதிகாலை 4 மணி காட்சியில் படம் பார்த்து வந்த ரசிகர்கள் படம் பற்றிய தங்களது கருத்துகளை கூறியுள்ளனர். அதாவது “பீஸ்ட்” படத்தின் 1st Half சூப்பராக இருப்பதாகவும், 2nd Half சும்மா வெறித்தனமான சண்டை காட்சிகளுடன் வேற லெவல் என்றும் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

இன்னும் சிலர் தளபதி தளபதி தான்; சும்மா வேற லெவல் Look;படம் Block buster தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆக மொத்தம் தளபதி விஜய்யின் ”பீஸ்ட்’ படத்தை ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com