நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சியாக இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் பிரியப்போவதாக இருவருமே தங்களது சமூக வலைதளப்பாக்கத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்தோசமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் "முசாஃபர்" என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்க வருகிறார். அதற்கான டீசரும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தற்போது அந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாகவும், நீண்ட நாடுகளுக்கு பிறகு கேமராவை இயக்குவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மியூசிக் ஆல்பத்தின் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டர் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தார் குறிப்பிடத்தக்கது.