என் மகனுக்கு நான் நல்ல அம்மாவாக  இல்லை! நடிகை ஜெனிலியா நெகிழ்ச்சிப்பதிவு!!

தனது  2வது மகன் பிறந்தநாளை  கொண்டாடிய ஜெனிலியா, நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என் மகனுக்கு நான் நல்ல அம்மாவாக  இல்லை! நடிகை ஜெனிலியா நெகிழ்ச்சிப்பதிவு!!

தமிழில் பாய்ஸ், சச்சின் சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்டபல படங்களில் கதாநாயகியாக நடி த்துள்ளவர் ஜெனிலியா.

கடந்த 2012ல் நடிகர்ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு  2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்கு பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக வலம்வரும் நடிகை ஜெனிலியா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் சுவாரசியமான வீடியோக்கள் என வெளியிட்டு கருத்துக்களையும் பதிவிட்டு ,ரசிகர்களுடன் உரையாடியும் வருகிறார்.

 கடந்த வருடம்  விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு ஜெனிலியா வெறித்தனமாக நடனம் ஆடிய  வீடியோ விஜய் ரசிகர்களிடையே வைரலாக பரவியது.

இந்நிலையில், தனது  2வது மகன் பிறந்தநாளை  கொண்டாடிய ஜெனிலியா,தனது மகனுக்கு அது குறித்த நெகிழ்ச்சியான பதிவையும், வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இன்று உனது (2 வது  மகன்)  பிறந்தநாள். எனக்கு கிடைக்கும் சின்ன வாய்ப்புகளில் நீ எந்த அளவுக்கு என் வாழ்க்கையின் அர்த்தம் என்று நான் கூற வேண்டும்.

உனக்கு நான் ஒரு பர்ஃபெக்ட் அம்மா கிடையாது. நான் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். பல நேரங்களில் நான் கூலாக இருந்ததில்லை. நிறைய விஷயங்களை நான் மறந்துவிடுகிறேன்.

சில சமயம் பைத்தியக்காரத்தனமாக நடந்து இருக்கிறேன்.ஆனால் நான் என்ன தான் நிறைய தவறு செய்தாலும் என் அழகான  சிறிய மகன் என்னை ஒரு பெஸ்ட் அம்மா என்கிறான்.

வாழ்க்கையில ஏதோ ஒரு விஷயத்தை நான் சரியாக செய்திருக்கிறேன் என்பதை அவன் நம்ப வைக்கிறான். அவன் தான் என் மகன் ரஹைல் தேஷ்முக் . என் இதயத்தை திருடிய  பையன். ஹாப்பி பர்த்டே என் அதிசயம்  ரஹைல் தேஷ்முக்.எப்போதும் நீ என்னுடன் இருப்பாய் என்று தெரியும் என்று நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.