
மாநாடு திரைப்படத்தின் முன்னோட்ட விழா இன்று சென்னை தி.நகரில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சிலம்பரசன் , இயக்குனர் வெங்கட்பிரபு , தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் மேடையில் பேசிய நடிகர் சிம்பு கூறுகையில், பொதுவாக என்னுடைய படம் என்றால் பிரச்சனை என்பது சாதாரண விஷயமாக இருக்கிறது என்றும் நான்
நிறைய பிரச்சனைகளை பார்த்து விட்டேன். அந்த பிரச்சனைகளை எல்லாம் நான் பார்த்துக்கொள்வேன் .என்னை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என கண் கலங்கியபடி ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும் என்னை நன்றாக புரிந்து கொண்டவர் யுவன் தான். எனவே அவரின் ராசி, நட்சத்திரம் உள்ள பெண்னை தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று சிம்பு கூறினார்.