இனி வில்லியாகவே தொடர்வேன்..! வனிதா பேசிய வீடியோ வைரல்..!

சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வனிதா..!

இனி வில்லியாகவே தொடர்வேன்..! வனிதா பேசிய வீடியோ வைரல்..!

சினிமாவில் இரண்டாம் இன்னிங்சை தொடங்கியுள்ள நடிகை வனிதா இனி வில்லி தான் எனது கேரக்டர் என கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில், நடந்த ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. 1980-களில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த வனிதா, அதன் பிறகு குடும்பப் பிரச்னையில் திரைத்துறையில் இருந்து விலகினார். ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து மீண்டும் சினிமாவில் தனது 
இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார் வனிதா. தொடர்ந்து பல படங்களில் நடிப்பதாக தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டே வந்தார். இடையில் பவர் ஸ்டாருடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் "தில்லு இருந்தா போராடு" என்ற படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார். முரளிதரன் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் 
கலந்து கொண்டு பேசிய வனிதா, சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை நான் கோட்டை விட்டுவிட்டேன். முட்டாள்தனம் பண்ணி விட்டேன். இதை மிக தாமதமாக உணர்ந்தேன்.

இனிமேல், விட்ட இடத்தை பிடிக்கப் போகிறேன். இந்த படத்தின் டைரக்டர் முரளிதரன் என்னிடம் வந்து கதை சொன்னபோது, ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கி தயங்கி கேட்டார். நடிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் மலர்ந்தது. வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தொடர்ந்து வில்லியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடம். இதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றார்கள். எனக்கு கார் ஓட்ட தெரியும். வேகமாக ஓட்டுவேன். ஆனால், ‘பைக்’ ஓட்ட தெரியாது. படத்துக்காக புல்லட் ஓட்ட ஒரு நண்பரிடம் கற்றுக்கொண்டேன். படத்தில் நான் புல்லட் ஓட்டி வரும் காட்சி, ‘பந்தா’வாக இருக்கும். உலக மகா வில்லியாக தெரிவேன் என கூறியுள்ளார். சினிமாவில் மீண்டும் கால்பதித்துள்ள வனிதாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.