புதிய திருப்பம்.. விவாகரத்து பண்ண மாட்டேன்... தனுஷின் திடீர் மனம் மாற்றம்??

தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

புதிய திருப்பம்.. விவாகரத்து பண்ண மாட்டேன்... தனுஷின் திடீர் மனம் மாற்றம்??

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா சமீபத்தில் விவாகரத்து செய்ய போவதாக இருவருமே அறிவித்தனர். இவர்கள் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்க என இரு மகன்கள் இருக்கின்றனர்.

திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், விவகாரத்து அறிக்கை வெளியிட்டது சினிமா வட்டாரங்களில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அதேபோல், ஐஸ்வர்யாவின் தந்தையான நடிகர் ரஜினியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் குடுபத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதில் தனுஷ் மனம்மாறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் முறையாக விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை என கூறியதாக சொல்லப்படுகிறது. தற்போது வரை விவாகரத்து வேண்டாம் என்கிற முடிவை தான் தனுஷ் எடுத்திருக்கிறார்.

குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் அட்வைஸ் செய்து வருகின்றனர். இதனால் இருவரும் மீண்டும் சேருவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.