பீஸ்ட் படத்திற்கு இடையில் வெளிவந்த முக்கிய தகவல்...!குஷியில் ரசிகர்கள்...!

பீஸ்ட் படத்திற்கு இடையில் வெளிவந்த முக்கிய தகவல்...!குஷியில் ரசிகர்கள்...!

தளபதி 66 படத்தின் முதல் பாடல் பற்றிய முக்கிய தகவல்...
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது பீஸ்ட் படத்தில் பிஸியாக நடித்துவரும் நடிகர் விஜய், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் மார்ச் மாதம் தான் தொடங்கும் என தெரிகிறது. ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் பீஸ்ட் படத்திற்கு பிறகு சில மாதங்கள் இடைவேளைக்கு பிறகு தான் விஜய் இதில் நடிக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 

தளபதி 66 படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளரான பிரபல கிராமப்புற பாடகர்கள் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இருவரும் இந்த பாடலை பாட உள்ளனர்.

பீஸ்ட் படத்திற்க்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்களுக்கு  மேலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com