நடிகர் தனுஷூக்கு ஜோடியாக இவரா..? படத்தோட டைட்டிலையும் மாத்தல.. கன்ஃபார்ம் பண்ண இயக்குநர்

செல்வராகவன் எழுதி இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதல் முறையாக இந்துஜா நடிக்க உள்ளார்.
நடிகர் தனுஷூக்கு ஜோடியாக இவரா..? படத்தோட டைட்டிலையும் மாத்தல.. கன்ஃபார்ம் பண்ண இயக்குநர்
Published on
Updated on
1 min read

கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் என்ற படத்திலும், மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் என்ற படத்திலும் ஒரே நேரத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் செல்வராகவன் எழுதி இயக்கும் நானே வருவேன் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதல் முறையாக இந்துஜா நடிக்க உள்ளார். இவர் விஜய்யின் பிகில், ஆர்யாவின் மகாமுனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். எப்போதுமே முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

ஆனால் செல்வராகவன் ஓரளவு அறியப்படும் நடிகையை தனுஷுக்கு ஜோடியாக்கியுள்ளதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது. செப்டம்பர் இறுதியில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நானே வருவேன் படத்தின் தலைப்பை ராயன் என செல்வராகவன் மாற்றி விட்டதாக ஒரு தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக நானே வருவேன் தலைப்பை மாற்றவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்தார் செல்வராகவன்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com