
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைம் மற்றும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தனுஷுடன் , ராஜிஷா விஜய், யோகி பாபு, லால், கெளரி, பூ ராம், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.
சந்தோஷ் நாராயணன் இசையில், தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவில் வெளியானது கர்ணன் படம். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாவும் இந்தப்படம் சாதனை படைத்தது. இந்திய அளவில் 'கர்ணன்' படத்திற்கு பல விமர்சனங்கள் எழுதப்பட்டன.
இந்நிலையில் சிறந்த ஐந்து சர்வதேச சிறந்த திரைப்படங்களின் பட்டியலை நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கர்ணன் படம் இடம் பிடித்துள்ளது.