”கே.ஜி.எப் 2” எனது மகனின் கதை? திடீரென்று எழுந்த குற்றச்சாட்டால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் ?

கே.ஜி.எப் 2 படத்திற்கு திடீரென்று ஏற்பட்ட சிக்கலால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

”கே.ஜி.எப் 2” எனது மகனின் கதை? திடீரென்று எழுந்த குற்றச்சாட்டால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் ?

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான ”கேஜி.எப் 2” திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றி நடைபோட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு வெற்றியை கண்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ள இந்த படம் இதுவரை 700 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இப்படத்தின் கதையம்சம் என்றே சொல்லலாம். ஒருவன் தன் அம்மாவின் ஆசைக்காக தங்கச் சுரங்கத்தில் அடிமையாக வேலை செய்யும் மக்களை மீட்டு அந்த மக்களுக்கு நல்ல வாழ்கையை அமைத்து தருவதற்காக ஒரு டானாக மாறுவது தான் கே.ஜி.எப் 1 & 2 சாப்டரின் கதை. இதன் கதை போக்கை இயக்குனர் பிரசாந்த் சீல் மிக சிறப்பாக கொண்டு போய் உள்ளார்.

இந்நிலையில் இந்த கதை எனது மகனின் கதை என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த குற்றசாட்டில் எனது மகன் கேஜிஎஃப் தங்க சுரங்கத்தில் வேலை பார்த்ததாகவும், அங்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்கத்தை கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவி செய்ததாகவும் எனது மகன் கடந்த 1996ஆம் ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் எனது மகனின் கதையை எனது அனுமதியில்லாமல் படக்குழுவினர் படமெடுத்து உள்ளதாகவும், அதுமட்டுமின்றி எனது மகனை கெட்டவனாக சித்தரித்துள்ளார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திடீரென்று ஏற்பட்ட இந்த குற்றச்சாட்டு கே.ஜி.எப் படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டு பொய்யானது. அதில் த்ஹுளிகூட உண்மை இல்லை என்று படக்குழுவினர் மறுத்துவிட்டனர். இது குறித்த தகவல் தற்போது இணையம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.