’அஜித் 61’ படத்திலும் விடாத ‘V' செண்டிமெண்ட்? படத்தின் டைட்டில் ’வ’ வில் தொடங்குகிறதா?

’அஜித் 61’ படத்திலும் விடாத ‘V' செண்டிமெண்ட்? படத்தின் டைட்டில் ’வ’ வில் தொடங்குகிறதா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் அஜித். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான ‘வலிமை’ திரைப்படம் 150 கோடியை தாண்டி வசூலை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் ‘அஜித் 61’  திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதால், இந்த படத்திற்காக சென்னை அண்ணாசாலையில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனிடையே ’அஜித் 61 ’ படத்தின் பூஜை மார்ச் 9ஆம் தேதியும் மார்ச் 18-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் “அஜித் 61 “ படத்தின் டைட்டிலை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கு முன்னர்  ’வலிமை’ படத்தின் டைட்டிலை அந்த படத்தின் பூஜை அன்றே படக்குழுவினர் அறிவித்தனர். அது போலவே இந்த படத்தின் டைட்டிலையும் பூஜை அன்றே அறிவிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து  ’அஜித் 61’ படத்தின் டைட்டில் ’வல்லமை’ என்று வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை பார்த்த ரசிகர்கள் சிலர், கடந்த சில ஆண்டுகளாகவே அஜித்தின் திரைப்படங்கள் வீரம், விவேகம், விஸ்வாசம், வலிமை, என ’V’ சென்டிமென்ட்டில் வந்து கொண்டிருக்கும் நிலையில் அதே வரிசையில் தற்போது ’வல்லமை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறிவருகின்றனர்.