என்னது மாளவிகா மோகனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா!..?என்னடா..சொல்றீங்க...

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனுக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற குழப்பம் தான் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

என்னது மாளவிகா மோகனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா!..?என்னடா..சொல்றீங்க...

தமிழ் சினிமாவில் பேட்ட படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகன். முதல் படமே ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் இவரின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது.

ஆனால், அந்த படத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை. அதனைத்தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த நடிகை மாளவிகா இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே தெலுங்கில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதனையடுத்து, ரஜினி, விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்ததை தொடர்ந்து தற்போது தனுஷூடன் , மாறன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

இப்படி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகன் அவ்வப்போது படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இணையத்தில் போஸ்ட் செய்து இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். அப்படி அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் தான் அவருக்கு திருமணமாகி விட்டதாக என பரபரப்பை கிளப்பி உள்ளது.

சமீபத்தில் லைட் க்ரீன் கலரில் இந்திய பெண் போல் பாரம்பரிய உடை அணிந்து போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகன் தனது இடது கால் விரலில் மெட்டி அணிந்திருப்பது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக, இந்து முறைப்படி திருமணமான பெண்கள் தான் கால் விரலில் மெட்டி அணிவார்கள்.  இதை கவனித்த நெட்டிசன்கள், மாளவிகா மோகனனுக்கு திருமணம் ஆகி விட்டது என விவாதம் நடத்த துவங்கினர். அதிலும் சிலர் நிஜமாகவே அவருக்கு திருமணம் ஆகி விட்டதா அல்லது ஃபோட்டோஷுட்டிற்காக இப்படி அணிந்திருக்கிறாரா என கேட்டு வருகின்றனர்.