
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வென்றுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஜெய்பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
பல்வேறு விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டு வரும் ஜெய்பீம் ஆஸ்கர் விருது குழுவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், நொய்டாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவிலும் ஜெய்பீம் தேர்வான சூழலில், தற்போது சிறந்த படம் என்ற விருதையும், சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது லிஜோமோல் ஜோஸுக்கும் கிடைத்துள்ளது. ஜெய்பீம் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது.