வாரிசுடன் ஜவான்... ரசிகர்களுக்கு அதிகரித்த எதிர்பார்ப்பு...

வாரிசு படத்தின் படபிடிப்பு நடக்கும் தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளது ‘ஜவான்’ படக்குழு.

வாரிசுடன் ஜவான்... ரசிகர்களுக்கு அதிகரித்த எதிர்பார்ப்பு...

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தோழா படம் புகழ் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தயாராகி வரும் படம் தான் ‘வாரிசு’. விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பல பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது என்று தான் கூற வேண்டும்.

சென்னை எண்ணூரில் இந்த படத்தின் படபிடிப்பு நடந்து வரும் நிலையில், அதே இடத்தில் தான் மற்றுமொரு படமும் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | சர்ப்ரைஸ்.. அட்லீக்கு நேரில் சென்று வாழ்த்து சொன்ன விஜய், ஷாருக்கான்..!

அட்லீ இயக்கும், ஷாருக்கானின், ‘ஜவான்’ படத்தின் படபிடிப்பும் அங்கு தான் நடந்து வருகிறது. மேலும், நடிகர் விஜய் தங்கி இருக்கும் அதே விடுதியில் தான் ஷாருக்கானும் தங்கி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று வாரிசு படபிடிப்புக்கு, ஜவான் படக்குழு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

படபிடிப்பில் மொபைல் ஃபோன்கள் அனுமதிக்கப்படாத நிலையில், அவர்களின் சந்திப்புக் குறித்த போட்டோக்கள் வெளியாகவில்லை என்றாலும், அவர்கள் சந்தித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

ஒரே இடத்தில் இரண்டு பெரும் படங்களின் படபிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியானதில் இருந்து இரு தரப்பு ரசிகர்களும் குஷியில் துள்ளி குதித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஒருவழியா தளபதியோட வாரிசு படத்தோட ரிலீஸ் தேதி தெரிஞ்சுடுச்சு.. அப்போ ஏகேவோடது எப்பவா இருக்கும்?

--- பூஜா ராமகிருஷ்ணன்