தளபதி விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை சொன்ன நடிகர் யாஷ்..! என்ன கதை தெரியுமா?

தளபதி விஜய் பாணியில் குட்டிக்கதை சொல்லி ”கே.ஜி.எப் 2” பட வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன நடிகர் யாஷின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை சொன்ன நடிகர் யாஷ்..! என்ன கதை தெரியுமா?

நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதியன்று வெளியான கே.ஜி.எப் 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. படம் வெற்றியடைந்ததை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க நினைத்த கன்னட நடிகர் யாஷ், தளபதி விஜய் ஸ்டைலில் ஒரு குட்டிக்கதையை கூறி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு கிராமத்தில் வறட்சி அதிகமாக இருந்ததால் மழைக்காக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வதற்கு முடிவு செய்து, எல்லோரும் பிரார்த்தனை கூடத்துக்கு வரும்போது ஒரே ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான். அந்த சிறுவனை பார்த்த அனைவரும் இது முட்டாள்தனம் என்றும் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறான் என்றும் கூறினார்கள். ஆனால் அந்த சிறுவன் செய்ததற்குப் பெயர்தான் நம்பிக்கை. தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி அடையலாம் என்று கூறிய அவர்,  நான் இன்றைக்கு இருக்கும் இந்த நிலைக்கு வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது.

எனக்கு அன்பை வாரி இறைத்த அனைத்து ரசிகர்களுக்கும் ‘கேஜிஎப்’ டீம் சார்பாக நன்றியை கூறிக்கொள்கிறேன். உங்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை தரவேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்பினோம். இந்த படத்தை நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார். யாஷின் இந்த வீடியோ தற்போது இணையம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது.