திருமண வாழ்க்கையால் சினிமா துறையில் பாதிப்பா..? நடிகை காஜல் அகர்வால் கூறிய பதிலால் நெகிழ்ச்சியின் உச்சியில் ரசிகர்கள்!!

திருமண வாழ்க்கையால் சினிமா துறையில் பாதிப்பா..? நடிகை காஜல் அகர்வால் கூறிய பதிலால் நெகிழ்ச்சியின் உச்சியில் ரசிகர்கள்!!
Published on
Updated on
2 min read

தமிழ், தெலுங்கு, இந்தி என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம்வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால். தமிழில் ‘பழனி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து, விஜய், அஜித், சூர்யா,கார்த்திக் எனப் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இப்படி அடுத்தடுத்த படங்களில்  கமிட்டாகி பிஸியாக நடித்துக்கொண்டிருந்த காஜல், பிரபல தொழிலதிபரான கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் காஜல் முன்னணி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். 

இதற்கிடையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அவர் கமிட்டான சில படங்களில் இருந்து விலகினாலும், இது குறித்து காஜல் அகர்வால் எந்த வித தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்படி எது குறித்தும் வாய் திறவாத காஜல், தற்போது திருமணத்திற்கு பிறகான தனது சினிமா வாழ்க்கையைக் குறித்து தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

என்னுடைய திருமண வாழ்க்கை ஒருபோதும் என் சினிமா வாழ்க்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், இன்று திருமணமான நடிகைகள் தாயாகிய பிறகு மார்க்கெட் குறைந்து விடும் என்ற அச்சத்திற்கு ஆளாக தேவையில்லை. ஏனென்றால் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் இந்த நிலைமை மாறியிருக்கிறது.

சொந்த வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் தற்போது தொழில் வாழ்க்கையை பெரிதாகப் பாதிப்பதில்லை. இதை ரசிகர்கள் நன்றாக  புரிந்துகொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு கதைத்தேர்வில் மிக கவனம் செலுத்தி வருகிறேன் என்றும், அதோடு குடும்பம் மற்றூம் வேலை இரண்டும் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதற்கான வழிமுறைகளை சரியாக சிந்தித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், அதிக கவனம் பெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com