நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்ஹாசன்!!

நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்ஹாசன்!!

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடைத்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து திரைப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு கமல்ஹாசன் பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார்.

முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு கார் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு இருசக்கர வாகனங்களையும் பரிசாக அளித்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது சூர்யாவிற்கு ரோலக்ஸ் கடிகாரத்தை கமல்ஹாசன் பரிசளித்துள்ளார். பரிசளித்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ள சூர்யா, வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் கணம் இது என்று பதிவிட்டுள்ளார். திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதை அடுத்து, ரோலக்ஸுக்கே ரோலக்ஸ் என்று ரசிகர்கள் பூரிப்படைந்துள்ளனர்.