’விக்ரம்’ பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பெயரை கேட்டதுமே சும்மா அதிர்ந்த அரங்கம்..! கமல் கொடுத்த ரியாக்சன் என்ன?

’விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியபோது அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் கத்தியதற்கு கமல்ஹாசன் கொடுத்த ரியாக்சன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

’விக்ரம்’ பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பெயரை கேட்டதுமே சும்மா அதிர்ந்த அரங்கம்..! கமல் கொடுத்த ரியாக்சன் என்ன?

தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக விளங்குபவர் நடிகர் கமலஹாசன். தனது கடின உழைப்பால் தசவதாரம் போன்ற ஹிட் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். உலக நாயகன் என்று அழைக்கப்படும் இவரின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், பா.ரஞ்சித், சிம்பு, உதயநிதி, விஜய் சேதுபதி, அனிருத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் கலந்துக்கொண்டு சிறப்பு வகித்தனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், விஜய் குறித்து பேச ஆரம்பித்தார். நடிகர் விஜய்யின் பெயரை அவர் சொன்னதும், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷமிட்டு கத்தினர். உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தினரை அமைதியாக இருக்கச் சொன்ன போதிலும் அரங்கம் அதிரும் அளவுக்கு தொடர்ந்து கரகோஷம் இருந்துகொண்டே இருந்தது.  

இதனையடுத்து நடிகர் கமல் கூட்டதினரை பார்த்து அமைதியாக இருக்க சொன்ன சில நிமிடங்களுக்கு பிறகே கரகோஷங்கள் அமைதியானது. இதிலிருந்தே தளபதி விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மாஸ் என்னவென்பது தெரிய வருகிறது. மேலும் இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.