இதிகாச கதையில் சீதா வேடத்தில் கரீனாவுக்கு பதில் கங்கனா.. மூவி அப்டேட்…!!

இந்தியில் உருவாகி  வரும் ‘சீதா’ திரைப்படத்தில் சீதையாக நடிகை கங்கனா ரணாவத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. 

இதிகாச கதையில் சீதா வேடத்தில் கரீனாவுக்கு பதில் கங்கனா.. மூவி அப்டேட்…!!

புராண கதையான ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் தற்போது இந்தியில்  ‘சீதா’ என்ற பெயரில் படமாக்க உள்ளனர்.

இப்படத்தை தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி மற்றும் மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர். சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைந்துள்ளதால், இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராக உள்ளது. இந்நிலையில்,இப்படத்தில் வரும் சீதை கதாபாத்திரத்திற்காக  முதலில் நடிகை கரீனா கபூரை அணுகி உள்ளனர்.

அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால், தற்போது அவருக்கு பதில் நடிகை கங்கனா ரணாவத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.