10 ரூபாய்க்கு தரமான சாப்பாடு வழங்கி ரசிகர்களை நெகிழ வைத்த நடிகர் கார்த்திக்!!

10 ரூபாய்க்கு தரமான சாப்பாடு வழங்கி  ரசிகர்களை நெகிழ வைத்த நடிகர் கார்த்திக்!!
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கார்த்திக். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர், படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திகொள்ளாமல், சென்னையில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை தனது ரசிகர்களின் உதவியோடு தொடங்கி வைத்திருக்கிறார். இவருடைய இந்த முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே , நடிகர் சூர்யா ‘அகரம்’ என்ற பவுண்டேஷனைத் துவங்கி அதன் மூலம் நிறைய குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். இந்நிலையில் இவருடைய தம்பி கார்த்திக் “உழவன்“ எனும் அமைப்பை நிர்வகித்து, அதில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவது, பழங்கால விதைகளை சேகரித்து வைப்பது, ஊர்ப்புறங்களில் கால்வாய் மற்றும் நீர்நிலைகளைப் பராமரிப்பது போன்ற விஷயங்களை ஆக்கத்துடன் செய்துவருகிறார். அந்த வரிசையில் தற்போது நடிகர் கார்த்தியின் அறிவுரைப்படி சென்னை பகுதியில் 10 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கும் உணவு வண்டிகள் திறக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக சென்னையின் வளசரவாக்கம் பகுதியில் வண்டிகளில் 10 ரூபாய்க்கு அவருடைய ரசிகர்கள் தரமான சாப்பாட்டை கொடுத்து வருகின்றனர். கிட்டதட்ட 150 நாட்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த திட்டத்தை பற்றி நடிகரும் இயக்குநருமான காதல் சுகுமார் தன்னுடைய சோஷியல் மீடியா பதிவில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அதில், “சென்னையில் எங்கெங்கும் இப்போது பார்க்க முடிகிறது, 10 ரூபாய்க்கு தரமான சாப்பாடு!!! தனது ரசிகர்களை வெறுமனே விசிலடிக்கும் நபர்களாய் பார்க்காமல் கரம் கொடுத்து சிகரம் தூக்கி உயர வைக்கிறார். அண்ணாமலை படத்தில் வினுச்சக்கரவர்த்தி சொல்வாரே… புள்ளன்னு பெத்தா இப்பிடி ஒரு புள்ளையப் பெக்கணும்! உதாரணம் கார்த்தி எனப் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு நடிகர் கார்த்தியின் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com