கத்ரினா கைஃப் -விக்கி கௌஷல் திருமணத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் என்னென்ன தெரியுமா?...!!

கத்ரினா கைஃப் -விக்கி கௌஷல் திருமணத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் என்னென்ன தெரியுமா?...!!

பாலிவுட் நடிகையான கத்தீரினா கைப் முதன்முதலில் "பூம்" என்ற திரைப்படத்தின் மூலம் தனது பாலிவுட் அறிமுகத்தை கொடுத்தார். இந்த திரைப்படம் இவருக்கும் மிக பெரிய அடையாளத்தை பெற்று தந்தது. தனது முதல் படம் பூம் பாலிவுட்டில் வெற்றியடைந்ததை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து மல்லீஸ்வரி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூலை வாரி குவித்தது.


இவ்வாறு ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்த கத்ரீனா கைஃப் இன்று வரை வெற்றி நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கத்ரினா கைஃப் தன்னை விட 5 வயது சிறியவரான நடிகர் விக்கி கவுஷலுடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் பரவியது. அதனைதொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதன்படி இருவருக்கும் வரும் 9 ஆம் தேதியான நாளை ராஜஸ்தானில் 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளது. இத்திருமணத்திற்காக நடிகை கத்ரீனா கைப் தனது காதலர் விக்கி கௌசலுடன் மும்பையில் இருந்து ராஜஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

மேலும் இத்திருமணத்தில் கலந்து கொள்ள வரும் யாரும் போட்டோவோ அல்லது வீடியோவோ எடுக்கக்கூடாது என்று கத்ரீனா தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தனது திருமணம் எப்போதும் தனிப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும் என்று கத்ரீனா கைஃப் விரும்பினார். எனவேதான் தனது காதலைக்கூட கடைசி வரை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கத்ரினா - விக்கி திருமணத்தில் பரிமாறப்படும் உணவுகள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


கச்சோரிஸ், தஹி பல்லா மற்றும் ஃப்யூஷன் சாட் ஆகியவற்றிற்கான நேரடி ஸ்டால். கபாப் மற்றும் ஃபிஷ் ப்ளாட்டர் உள்ளிட்ட வட இந்திய உணவு வகைகள். பாரம்பரிய ராஜஸ்தானி உணவு வகைகளான தால் பாத்தி சுர்மா போன்ற பல்வேறு பருப்பு வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் சுமார் 15 வகையான பருப்பு வகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இத்தாலிய சமையல்காரரால் உருவாக்கப்பட்ட ஐந்து அடுக்கு திருமண கேக்கும் இந்த திருமண மெனுவில் அடங்கும் என கூறப்படுகிறது.