5 வயது சிறிய நடிகருடன் கத்ரீனா கைஃப்புக்கு டும் டும் டும்.... கையில் வைக்கும் மெஹந்திக்கே இவ்வளவு செலவா..?

5 வயது சிறிய நடிகருடன் கத்ரீனா கைஃப்புக்கு டும் டும் டும்.... கையில் வைக்கும் மெஹந்திக்கே  இவ்வளவு செலவா..?

இந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கத்ரீனா கைஃப். இவர் ஹிந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மாடலாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய கத்ரீனா, பின் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2003 ஆம் ஆண்டு வெளிவந்த பூம் என்ற படத்தின் மூலம் தான் கத்ரீனா நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இந்தியில் பல படங்களில் நடித்திருந்தார். இதனிடையே 38 வயதான கத்ரீனா கைப்பும், 33 வயதான நடிகர் விக்கி கவுசாலும் நீண்டகாலமாக காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்களின் திருமணம் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் ராஜஸ்தானில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப்பின் மெஹந்தி குறித்து தகவல் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி உள்ளது. திருமண சடங்குகளில் ஒன்று தான் மெஹந்தி விழா.அந்த வகையில் கத்ரீனா கைஃப் தன்னுடைய திருமணத்திற்காக ரொம்ப ஸ்பெஷலான மெஹந்தி போடுகிறாராம்.

மேலும், கத்ரீனாவுக்காக ஸ்பெஷலாக Sojat மெஹந்தி வரவைக்கிறார்கள். இது ஜோத்பூரில் உள்ள பாலி எனும் இடத்திலிருந்து கொண்டு வரப்படுகிறது. இதனை செய்வதற்கு என்றே ஸ்பெஷலாக நபர்கள் இருக்கிறார்கள். 

அவர்கள் மூலம் தான் இந்த மெஹந்தியை செய்து கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த மெகந்தி இயற்கையான முறையில் உருவாக்கபடுவதாகவும், அதில் எந்த கெமிக்கல் கலக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த மெகந்தி முழுமையாக கையால் தயாரிக்கப்பட்டு கத்ரினாவுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.


இந்த மெஹந்தியின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது, ஆனால், மெஹந்தி தயாரித்த நபர் பணம் எதுவும் வாங்கவில்லை. பின் அதை அவர் கத்ரினாவுக்கு இலவசமாகவே அனுப்புவதாகக் கூறி இருக்கிறார். கத்ரீனாவின் திருமணம் மிக கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.