
பிரபல நடிகையும் பாஜகவின் முக்கிய நிர்வாகியான குஷ்பூ, தான் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது கையில் ஊசி இருப்பது போன்றும், வெள்ளிக்கிழமை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் குஷ்பு விரைவில் குணமாக வேண்டுமென்று மருத்துவமனையின் சார்பில் அளிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளையும் குஷ்பு பகிர்ந்துள்ளார். மேலும் குஷ்பூ தன்னை அப்போலோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை மருத்துவர்கள் நன்றாக கவனித்துக் கொண்டார்கள் என்றும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இன்று தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் குஷ்பூ எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படாத நிலையில், குஷ்புவுக்கு என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.