ரஜினியுடன் 26 வருடங்களுக்கு முன்பே நடித்துவிட்ட பெரியாத்தா- வைரல் புகைப்படம்

அண்ணாத்த படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து கவனமீர்த்த பெரியாத்தா, ரஜினிகாந்துடன் 26 வருடங்களுக்கு முன்பே நடித்துள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
ரஜினியுடன் 26 வருடங்களுக்கு முன்பே நடித்துவிட்ட பெரியாத்தா- வைரல் புகைப்படம்
Published on
Updated on
1 min read

அண்ணாத்த படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து கவனமீர்த்த பெரியாத்தா, ரஜினிகாந்துடன் 26 வருடங்களுக்கு முன்பே நடித்துள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பெரியாத்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் குலப்புல்லி லீலா. கேரளாவைச் சேர்ந்த இவர் பல்வேறு மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவர் அண்ணாத்தக்கு முன்பாக ஏற்கனவே ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் அவர் நடித்துள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படத்தில் அவர் ஒரு சின்ன காட்சியில் மட்டும் வந்திருப்பார். அந்த காட்சியை மட்டும் படமாக எடுத்து பலரும் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com