பார்வையாளர்களை பயத்தின் உச்சகட்டத்திற்கு கொண்டுசெல்ல வருகிறது லேடி சூப்பர்ஸ்டாரின் கனெக்ட்..!

மாயா,கேம்ஓவர் போன்ற திகில் திரைப்படங்களில் பேய்யை கண்களில் காட்டாமலே பார்வையாளர்களை பதறவைத்த வித்தியாசமான இயக்குனர் அஸ்வின் சரவணன்.இவர் இயக்கி வரும் புதிய திரைப்படம் கனெக்ட்

பார்வையாளர்களை  பயத்தின் உச்சகட்டத்திற்கு கொண்டுசெல்ல வருகிறது  லேடி சூப்பர்ஸ்டாரின் கனெக்ட்..!

மேலும் படிக்க   கனெக்ட் - சிறப்புக்காட்சி பார்த்த புது ஜோடி

கனெக்ட் :
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ,சத்யராஜ்,ஹனியா நஃ பிஸ்,அனுபம் கெர்,வினய் ராய், போன்ற நட்சத்திரங்களின் நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படம் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ரவுடிபிச்சர்ஸ் வழங்கும் கனெக்ட். கடந்த ஆண்டு கொரோன லக்கடவுன் சூழலை மையமாக வைத்து வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது இதன் கதைக்களம். 

மேலும் படிக்க  திரைஅரங்கினை தெறிக்கவிட கனமாக வருகிறது விஷால் நடிக்கும் லத்தி 

தனிமைப்படுத்தப்பட்ட தாயின் தவிப்பு:

நயன்தாரா(சூசன்) அவர் மகள் ஹனியா நஃ பிஸ்(அன்னா)கணவர் (ஜோசேப்) தந்தை சத்யராஜ் (அர்துர்) இவர்களுடன் அமைதியான வாழ்கை வாழ்ந்து வருகிறார்.கொரோன பாதிதப்பு ஏற்பட்டதால் தாய்க்கும் மகளிற்குமான நெருக்கம் தடைபடுகிறது.தனிமையில் இருக்கும் அன்னா தன் குறும்புதனதின் தூண்டுதலால் அமனுஷிய விளையாட்டான ஒயிஜா போர்டை விளையாடுகிறார்.இதனால் அமைதியான வாழ்க்கையில் அமானுசியமாக மாறுகிறது.தனது மகளின் இந்த வித்தியாசமான இந்த நடவடிக்கைக்கு என்ன கரணம் என்பதை கண்டுபுடிக்க முன்வரும் தாய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சிதான் என்ன? தனது மகளாகிய அன்னாவை சூசன் மீட்டாரா? இல்லையா ? என்பதை திகிலாக சொல்லும் கதைதான் கனெக்ட்.  அன்னவை காப்பாற்ற வரும் பாதிரியாராக பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடித்துள்ளார்.படத்தின் கதை சுருக்கமாக இருந்தாலும் இதனை இயக்குனர் கையாண்ட விதம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. வெறும் 6 கதாபாத்திரங்களை கொண்டு கதையை விறுவிறுபக கொண்டுசென்றிருக்கிறார் இயக்குனர்.இப்படத்தில் லைட்டிங் மற்றும் பின்னணி இசை பயத்தை தூண்டும்விதமாக  அமைந்திருக்கிறது. மேலும் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி இப்படத்திற்கு ஒளிப்பதிவுசெய்ந்திருக்கிறார். மற்றும் பிருத்வி சந்திரசேகர் இசைஅமைத்துள்ளார்.தனது எல்லா திரில்லர் படங்களிலும் பேய் என்ற ஒன்றின் உருவம்கூட  காட்டாமல் பார்வையாளர்களின் ஆர்வத்தையும் இதயத்துடிப்பையும் உச்சிக்கு கொண்டுசெல்லும்  கேம் ஓவர் ,மாயா போன்ற படங்களின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இந்தப்படத்தை எப்படி இயக்கியிருப்பர் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துவருகிறது.கடந்த மாதம் வெளியான கனெக்ட் படத்தின் டீசெர் யூடூப்பியில்  மிகுந்த வரவேற்பெற்றநிலையில்.நாளை 22,12,2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.இப்படமானது பார்வையாளர்கள் அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்கமுடியாத அளவிற்கு ட்விஸ்ட் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாராவிற்கு வசனத்தை காட்டிலும்  முகபாவங்கள் பாத்திரத்திற்கு அழகுசேர்திருக்கிறது.மேலும் நயன்தாராவின் நடிப்பைக்காண ரிலீஸ் நாளை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்  ரசிகர்கள்.இந்த படத்திற்கு முன்னபதிவு கடந்த வாரமே ஆன்லைனில்   தொடங்கிவிட்டது.

சுவாதிகா  ரெங்கராஜன்.