புது காதலியுடன் டேட்டிங் சென்ற பிரபல பாலிவுட் நடிகர்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

முன்னணி பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் புதிய காதலி இவர் தான் என ஒரு தகவல் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது. இந்த தகவல் அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

புது காதலியுடன் டேட்டிங் சென்ற பிரபல பாலிவுட் நடிகர்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ரோஷனின் மகனான ஹ்ரித்திக் ரோஷன், தனது சிறு வயதில் இருந்தே, அதாவது 1980 களில் தனது அப்பா இயக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் 2000 ம் ஆண்டு வெளியான கஹோ நா பியார் ஹை படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதுடன் அவருக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த அறிமுக ஆண் நடிகர் ஆகிய பிலிம் fair விருதுகளையும் பெற்றுத்தந்தது. அதன் பின்னர் 2003ம் ஆண்டு வெளியான கொய் மில் காயா படத்தில் நடித்தார். மேலும் 2006 ம் ஆண்டு வெளியான க்ரிஷ் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. அதே ஆண்டில் வெளியான தூம் 2 படம் மிகப்பெரிய ஹிட்டானது. மேலும் அதில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான தூமச்சாலே பாடல் மிக பெரிய ஹிட் அடித்தது. 2013 ம் ஆண்டு கங்கனா ரனாவத் உடன் இணைந்து க்ரிஷ் 3 படத்திலும் சூப்பர் ஹீரோவாக நடித்து அசத்தினார். 

மேலும் இவரின் முதல் படம் வெளியான ஆண்டிலேயே நடிகர் சஞ்சய் கானின் மகள் சூசேன் கானை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஹிரேஹன் ரோஷன் (16 வயது), ஹிரிதன் ரோஷன் (14 வயது) என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள், கடந்த 2014 ம் ஆண்டு இவர்களின் 14 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்து கொண்டனர். கடந்த 2010 ம் ஆண்டு வெளியான கைட்ஸ் படத்தில் கங்கனா ரனாவத் உடன் இணைந்து நடித்தார். இந்த படத்தின் போது இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது. அதுமட்டுமல்லாமல் க்ரிஷ் 3ம் பாகத்திலும் அவருடன் இணைந்து நடித்தார். அப்போது இந்த வதந்திகள் மேலும் பரவ தொடங்கியது. இது பற்றி கங்கனா ஒரு பேட்டியில் கூறிய கருத்து இருவருக்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது ஹ்ரித்திக் சபா ஆஸாத் என்ற நடிகையுடன் காதலில் உள்ளார் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் பரவியுள்ளது. அதனை நெட்டிசன்கள் ஷேர் செய்தும் வருகின்றனர். மினிமம் எனும் படத்தில் இணைந்துள்ள நடிகை சபா வுக்கு ஹ்ரித்திக் ஸ்பெஷலாக பாராட்டு தெரித்துள்ளார். அதற்கு பதில் அளித்த நடிகை சபா ஆஸாத், 'Mon Amour' என போட்டுள்ள கமெண்ட் மூலம் இவருக்கும்  ஹிரித்திக்கும் இருக்கும் காதல் உண்மை தான் என கூறி வருகின்றனர் ரசிகர்கள். மேலும் நண்பன் படத்தில் அஸ்க்கு அஸ்க்கு பாடலில் ஆமர் என்ற ஒரு வார்த்தை வரும். ஆமர் என்றால் பிரெஞ்சு மொழியில் காதல் என்று பொருள். அந்த வார்த்தையை சபா ஆஸாத் பயன்படுத்தி உள்ளார். அதனால் இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டது என நெட்டிசன்கள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் எதுவும் கூறாததால், விரைவில் தங்களது காதலை அறிவிப்பார்களா... என எதிர்பார்க்கப்படுகிறது.