வெளியானது ஜீவி -2 அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்; குவியும் பாராட்டுகள்:

ஜீவி 2 படத்தின் தைகாரப்பூர்வ டீசரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். நீளமாக வெளியிடப்பட்ட இந்த டீசரின் உருவாக்கம், தங்களுக்கு ஆர்வத்தை அதிகரிப்பதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

வெளியானது ஜீவி -2 அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்; குவியும் பாராட்டுகள்:

2019ம் ஆண்டு வெளியான ஜீவி படத்தின் சீக்வல் தற்போது உருவாகியுள்ளது. தொடர்பியல் மையப்புள்ளி பற்றிக்  கூறும் இந்த படமானது தொடர்ச்சியாக நடக்கும் அனைத்து சம்பவங்களையும் கவனித்து அது குறித்த பின்னணியும் விசாரிக்கும் படமாக இருக்கிறது. அதன் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெற்றி, விஜே கோபிநாத் இணைந்து நடித்த ஜிவி படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதன் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று ட்விட்டரில் வெளியிட்டார். நடிகர் வெற்றி நடிக்கும் 'ஜிவி 2' படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கி 27 நாட்களில் முடிவடைந்தது. முதல் படத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத் தான் இதன் தொடர்ச்சியையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிரான கதையுடன் கூடிய இந்த டீஸர் மனதைக் கவரும் த்ரில்லராக அமைந்ததை உறுதியளிக்கிறது. 'ஜிவி 2' முதல் பாகம் முடிவடையும் இடத்திலிருந்து தொடங்குகிறது மற்றும் அதன் தொடர்ச்சி அனைத்து முக்கிய கூறுகளையும் தக்க வைத்துக் கொள்ளும். அதன் தொடர்ச்சியாக ரோகினி, கருணாகரன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களையும் தயாரிப்பாளர்கள் தக்கவைத்துள்ளனர்.

'ஜிவி' படம் 2019 இல் வெளியானது. அதில் கருணாகரனுடன் வெற்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை பிரவீன் குமார் ஒளிப்பதிவும் படத்தொகுப்பை பிரபல எடிட்டர் பிரவீன் கே.எல் செய்தார். மேலும், படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்திருந்தார். தற்போது வெளியாக தயாராகிக் கொண்டிருக்கும் ஜீவி 2 படத்திற்கும் அதெ குழுவினர் தான் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் திரைக்கதையை பாபு தமிழ் எழுதியிருந்த நிலையில், இந்த படத்திற்கு கோபிநாத் இப்படத்தின் வசனத்தை எழுதியுள்ளார். இதனால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உண்மையில் அதிகமாகி உள்ளது.

2019 க்ரைம் படத்தின் இரண்டாம் பாகமான இந்த ஜீவி 2 படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டுக்குள் படத்தை வெளியிட படக்குழுவினர் நம்பிக்கை வைத்துள்ளனர்.