
ஆழ்வார்பேட்டையில் சாம்கோ ஹோட்டல் முன்பு கமல் சாரைப் பார்க்க 10 - 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஏங்கி நிற்பேன். ஆனால் இன்று அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என லோகேஷ் கனகராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும் விக்ரம் படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என அவர் கூறினார். விக்ரம் ஷூட்டிங்கின்போது நடிகர் கமலின் மேக் அப் மேனாக தாம் 32 நாட்கள் இருந்ததாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ரத்தக் கறை உள்ளது போன்ற லுக் வேண்டும் என்பதால் தாமே மேக் அப் போட்டுவிடவா என்று கமலிடம் கேட்டபோது அவரும் ஒப்புக்கொண்டார். கமல் சாருக்கு மேக் அப் போட்டுவிட்ட முதல் இயக்குனர் நான் தான்” என லோகேஷ் தெரிவித்தது அனைவரையும் கவர்ந்துள்ளது