முன்பதிவிலேயே ரூ.100கோடி வசூல் செய்து சாதனை புரிந்த மரக்கார்..!

உலகம் முழுவதும் 4,100 திரையரங்குகளில் வெளியீடு..!
முன்பதிவிலேயே ரூ.100கோடி வசூல் செய்து சாதனை புரிந்த மரக்கார்..!
Published on
Updated on
1 min read

 மலையாளத்தில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் பிரம்மாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ளது மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம். கிட்டத்தட்ட 83 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள திரைப்படத்தை, தியேட்டர்களில் வெளியிட்டால், தற்போதைய சூழலில் போட்ட முதலீட்டை எடுக்க முடியாது என படக்குழுவினர் எண்ணியதால், ஓடிடியில் படத்தை வெளியிட படக்குழு தயாரானது. இந்த சமயத்தில் கேரள அரசு தலையிட்டு தியேட்டர் வெளியீட்டில் உதவிகளை செய்ய முன்வந்தது. அதனை தொடர்ந்து படத்தை தியேட்டரிலேயே வெளியிடலாம் என படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்து கேரளாவில் 625 தியேட்டர்கள் உட்பட உலகமெங்கிலும் மொத்தம் 4,100 திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் படத்திற்கான முன்பதிவு சமீபத்தில் துவங்கப்பட்டது. தற்போது வரை முன்பதிவிலேயே ரூ.100கோடி ரூபாயை வசூலித்து இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படி முன்பதிவிலேயே அதிகம் வசூலித்த முதல் படம் என்ற சாதனையை மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படம் பெற்றுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com