தொகுதிகளை முடித்து சினிமாவில் ரவுண்டிக்க சென்ற உதயநிதி..! மாரிசெல்வராஜ் இயக்கத்தில் இணைவதாக தகவல்..!

தொகுதிக்கு டாடா சொன்ன உதயநிதி..!

தொகுதிகளை முடித்து சினிமாவில் ரவுண்டிக்க சென்ற உதயநிதி..! மாரிசெல்வராஜ் இயக்கத்தில் இணைவதாக தகவல்..!

கடந்த ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் பார்வையற்றவாராக நடித்து அசத்தியிருப்பார் உதயநிதி. 2012-ல் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு கதாநாயகனாக அறிமுகமான உதயநிதி, அதனை தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். 

இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, மனிதன், கெத்து, இப்படை வெல்லும், பொதுவாக எம் மனசு தங்கம், சரவணன் இருக்க பயமேன், நிமிர், கண்ணே கலைமானே என பல படங்களில் நடித்து சினிமா உலகில் இரண்டாம் கட்ட நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார் உதயநிதி. அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் பணிகளில் பிசியான அவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 

அதன் பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், தொகுதியின் இண்டு இடுக்கெல்லாம் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் உதயநிதி. சரி இனி சினிமா பக்கம் செல்லாமல், தொகுதியை முன்னேற்றும் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதியை வழங்கியது அரசு. 

ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை நடித்து கொடுப்பதற்காக மீண்டும் சினிமா பக்கம் சென்றுள்ளார் உதயநிதி. கண்ணை நம்பாதெ, ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமெக், மகிழ் திருமேனியின் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி. அதன் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத் தக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்தவர் மாரிசெல்வராஜ். கர்ணன் படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் மற்றும் மீண்டும் தனுஷை வைத்து படங்களை இயக்கவுள்ளார். இந்த இரு படங்களும் முடிந்த பிறகு உதயநிதியின் படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.