ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்..!!!

தெலுங்கு பிரபலம் மோகன்லால் அழுதபடி தனக்கு வீடியோ வெளியிட்ட 80 வயது தீவிர ரசிகைக்கு வீடியோ காலில் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்..!!!
Published on
Updated on
1 min read

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் மோகன்லால். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில், நடிகர் மோகன்லால் தனது ரசிகை ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.கேரளாவின் புன்குன்னம் என்கிற பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருப்பவர் ருக்மிணி. 80 வயதான இவர் மோகன்லாலின் தீவிர ரசிகை.

சமீபத்தில் இவர் அழுதபடி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில்  வைரலானது. அதில், மோகன்லால் பெயரை வைத்து தன்னைப் பலரும் கிண்டல் செய்வதாகவும், அவரை சந்திக்க முடியவில்லை என்பது குறித்தும் அவர் மிகவும் வருத்ததுடன் பேசி இருந்தார்.

இந்த வீடியோ குறித்து அறிந்த நடிகர் மோகன்லால், ருக்மிணியை வீடியோ காலில் அழைத்துப் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது உங்களை சந்திக்க வேண்டும் என ஆசையுடன் கேட்ட ருக்மிணியிடம், கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு, நேரில் வந்து சந்திப்பதாக நடிகர் மோகன்லால் உறுதி அளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com