என் தலைவன் சிங்கம் வந்துட்டான்டா...இணையத்தை கலங்க வைக்கும் "தி லெஜண்ட்" First Look!!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தி லெஜண்ட் அண்ணாச்சி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பஃர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தையே சூடேற்றி வருகிறது.

என் தலைவன் சிங்கம் வந்துட்டான்டா...இணையத்தை கலங்க வைக்கும்  "தி லெஜண்ட்" First Look!!

தமிழகத்தில் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்ஜியத்தியே நடத்தி வருபவர் தான் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணன். இவர் தனது கடைகளின் விளம்பரத்திற்கு அவரே மாடலாக மாறி, அதுவும்  ஹன்சிகா, தமன்னா என  பல முன்னணி நடிகைகளுடன் நடித்து வெளியிட்டார். ஆனால் அந்த விளம்பரத்திற்கு மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும் விதமாக எந்த வித பாசிட்டிவ் கமெண்ட்-டும் வரலதான் சொல்லனும். 

இருப்பினும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத அண்ணாச்சி, தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக ஹீரோவா மாறுவதற்கு முடிவு செய்தார். அதன்படி ஒரு படத்தில் கமிட் ஆகி, அவர் படத்திற்கு அவரே பல முன்னணி நடிகர்களிடம் இருந்து கால்ஷீட் வாங்கி ஒப்பந்தம் செய்தார். அதேபோன்று தனது படத்தில் பங்கேற்கும் பாடலுக்கு இசையமைப்பதற்காகவும், ஒளிபதிவு செய்வதற்காகவும் ஹேரிஸ் ஜெயராஜ், வைரமுத்து, வேல்ராஜ் என பல முன்னணி கலைஞர்களை அண்ணாச்சி ஒப்பந்தம் செய்தார்.

இவர் நடிப்பில் உருவாகி வரும் ”தி லெஜண்ட்” படத்தில் சரவண அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடலா என்பவர் நடித்து வருகிறார். இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அண்ணாச்சி நடிக்கும் முதல் திரைப்படமே பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளதாகவும் கூறப்பகிறது.

இந்நிலையில் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள் நடிக்கும்  ”தி லெஜண்ட்” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பஃர்ஸ்ட் லுக் இரண்டும் சற்றுமுன் வெளியாகி இணையத்தையே சூடேற்றி வருகிறது. அட ஆமாங்க...அந்த மோஷன்போஸ்டரில் அண்ணாச்சி ஹாலிவுட் ஹீரோவுக்கே சவால் விடும்வகையில் சும்மா மாஸா நிற்கிறார். இந்த படத்தில் அருள் சரவணன் விஞ்ஞானியாக நடிப்பதால், ஆராய்ச்சி மையம், கண்ணாடி குடுவைகள் என மோஷன் போஸ்டர் மெர்சலாக உள்ளது. மோஷன் போஸ்டரில் பைனல் டச்சாக கையில் எதோ ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு டேரராக நிற்கிறார் நம்ம அண்ணாச்சி.

ஆனா இந்த மோஷன் போஸ்டரை பார்த்த நெட்டிசன்ஸ் சும்மா இருப்பாங்களா...அடடா தலைவன் களம் இறங்கிட்டான் இனி கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்திலும் இனிமே இவர் தான் மாஸ் என ட்ரால் செய்து வருகின்றனர். இருந்தாலும் சும்மா சொல்லக்கூடாதுங்க தலைவன் செம கெத்தாதா...இருக்காரு...