பூதமாக களமிறங்கிய பிரபு தேவா...வைரலாகும் மோஷன் போஸ்டர்..!

பூதமாக களமிறங்கிய பிரபு தேவா ‘மை டியர் பூதம்' படத்தின் மோஷன் போஸ்டரை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பூதமாக களமிறங்கிய பிரபு தேவா...வைரலாகும் மோஷன் போஸ்டர்..!

கோலிவுட்டில் முன்னணி நடிகர்,  இயக்குனர்,  டான்ஸ் மாஸ்டர் என பன்முக திறமையாளராக வலம் வருபவர் தான் நடிகர் பிரபுதேவா.  ’காதலன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இதைத்தொடர்ந்து, ராசய்யா, மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, காதலா காதலா , சுயம்வரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தது. 

இதனைத்தொடர்ந்து, பிரபுதேவா நடிப்பில் ‘தேள்’, ‘பஹீரா’, ‘யங் மங் சங்’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.  இதில் ‘தேள்’ படம் இன்று டிசம்பர் -10 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுப் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் இவரது நடிப்பில் உருவான பொன் மாணிக்கவேல் திரைப்படம்   கடந்த நவம்பர்-19 தேதி ஓ.டி.டி யில் வெளியானது.

இந்நிலையில், ராஜவன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துவரும் படம் ‘மை டியர் பூதம்’. பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார்.

தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் பூதமாக நடித்து  பிரபுதேவா அனைவரின் கவனம் ஈர்க்கிறார். இந்த போஸ்டரை நடிகர் பிரபுதேவா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.