பிரபல ஆபாசபட நடிகை  மர்ம மரணம்!

பிரபல ஆபாச நடிகை டகோடா ஸ்கை தனது வீட்டில் போலீசாரால் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பிரபல ஆபாசபட நடிகை  மர்ம மரணம்!
Published on
Updated on
1 min read

இந்திய திரையுலகையே உலுக்கிய நடிகர் சுஷாந்த் சிங் மரணம் அடைந்து ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் அவரது மர்ம மரணம் குறித்த சர்ச்சை இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில்,அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த27 வயதே ஆன பிரபல ஆபாச நடிகை டகோடா ஸ்கை.தனது வீட்டில் போலீசாரால் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவரது மர்ம மரணம் வெளியானது முதலே உலகம் முழுவதும் இருக்கிற திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.இதனிடையே நடிகை டகோடா ஸ்கை மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும்,  அவரது தாத்தாவும், பாட்டியும் கொரோனா பாதிப்பால் இறந்ததன் காரணமாக, அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த வருடம் மே மாதம் அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டு ஓவியத்தின் முன்பு நடிகை டகோடா ஸ்கை  அரை நிர்வாண நிலையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com