நடிகை வரலட்சுமி சரத்குமார் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது   என்.ஐ.ஏ ..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது என்.ஐ.ஏ ..!

Published on

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர்  நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளர் என்பதும், போதைப் பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை சினிமாவில் ஆதிலிங்கம் முதலீடு செய்துள்ளதும்  என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஆதிலிங்கம் குறித்த தகவல்களை திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என 
தேசிய புலனாய்வு சம்மன் அனுப்பியுள்ளது.   

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com