இரட்டை வேடத்தில் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த ‘நானே வருவேன்’ டீசர்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகி தற்போது ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
இரட்டை வேடத்தில் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த ‘நானே வருவேன்’ டீசர்!
Published on
Updated on
2 min read

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், ‘நானே வருவேன்’ என்ற படம் தற்போது வெளியாகத் தயாராகி வருகிரது. கலைப்புலி எஸ் தாணு-வின் தயாரிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நேற்று வெளியானது.

‘வீரா’ என்ற படத்தின் பாடலை பின்னணியில் கொண்ட இந்த டீசர், பயங்கர்மாக இருக்கிறது. அதிலும், இரண்டு தனுஷ் இந்த படத்தில் பலர் எதிர்பாராத நிலையில், ஒரு தனுஷ் காட்டுவாசியாகவும், மற்றொரு தனுஷ் படித்த மேதையாகவும் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

மேலும், படத்தில் மிகவும் பெரிய ஆச்சிரியம் என்னவென்றால், செல்வராகவன் தோற்றம் தான். கிட்டத்தட்ட அகோரி போலவே அவதாரம் எடுத்து, தனது இயக்கத்தில் வந்த படத்தில் முதன் முறையாக நடித்திருக்கிறார் அவர். அவரது தோற்றமும், யுவனின் பயங்கரமான பி.ஜி.எம்-மும் இந்த படத்தின் மிகப்பெரிய ஏற்றமாக இருக்கும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். மேலும், ஒரு வேளை செல்வராகவன் தனுஷின் வயதான தோற்றத்தில் நடிக்கிறாரா என்ர கேள்வியும் கிளம்பியுள்ளது.

அந்த வகையில், நேற்று வெளியான இந்த டீசர், 4 மில்லியன் பார்வையாளர்கள் எட்டி, ட்ரெண்டிங்கில் #3ம் இடத்தைப் பிடித்திருக்கிறது. முதன் முறையாக தனுஷுடன், செல்வராகவும், யுவனும் இணைந்து உருவாக்கிய இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, என்று வெளியாகும் என்ற ஆர்வமும், மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்த டீசர் அந்த எதிர்பார்ப்புகளுக்கு நல்ல தீனியாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com