நான் ஒரு நாளும் இதை மட்டும் பொறுத்துக்கொள்ள மாட்டேன்...! கொந்தளித்த நாக சைதன்யா

நான் ஒரு நாளும் இதை மட்டும் பொறுத்துக்கொள்ள மாட்டேன்...! கொந்தளித்த நாக சைதன்யா
Published on
Updated on
1 min read

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா. இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக தங்களது 4 வருட காதல் திருமணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்தனர்.

இந்த செய்தி இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே  சமீபத்தில் நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தாதான் என  கூறியிருந்தார்.

அதற்கேற்றாற்போல், நடிகை சமந்தாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை தற்போது நீக்கியிருந்தார். இதனால் இருவரும் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதனிடையே இவர்கள்  விவாகரத்து பற்றிய பல்வேறு  செய்திகள் இன்றளவும் இணையத்தில் வந்துகொண்டு தான் இருக்கிறது. அதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இது குறித்து நாக சைதன்யா கருத்து தெரிவித்து உள்ளார். அதில் "என்னை பற்றி என்ன செய்தி வந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் என் குடும்பம் பற்றி எதாவது தவறான செய்தி வந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதை மாற்ற விளக்கம் கொடுப்பேன். மரத்தில் பழம் இருந்தால் தான் அதன் மீது கல் வீசுவார்கள் என நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்" என நாக சைதன்யா கூறி இருக்கிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com