சமந்தாவை காதலித்தபோதே வேறு நடிகையுடன் லிவிங் டுகெதர்: இப்போ பீஸ்ட் நடிகையுடன் கிசுகிசு: சர்ச்சையில் சமந்தா முன்னாள் கணவர்

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்தபோதே வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக இணையத்தில் செய்தி தீயால் பரவி வருகிறது.

சமந்தாவை காதலித்தபோதே வேறு நடிகையுடன் லிவிங் டுகெதர்: இப்போ பீஸ்ட் நடிகையுடன் கிசுகிசு: சர்ச்சையில் சமந்தா முன்னாள் கணவர்

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.  நடிகர் நாக சைதன்யா, தன்னுடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகை சமந்தாவை காதலித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக இருந்து வந்தனர்.

திருமணத்திற்கு பிறகுதான் நடிகை சமந்தாவின் சினிமா கிராஃப் உயரத் தொடங்கியது.  அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்து இருவரும் மணபூர்வமாக பிரிந்தனர்.


இதனையடுத்து இருவரும் பிரிந்த பிறகும் அவர்கள் மீதான விமர்சனங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. திருமணத்திற்கு முன்பு லிவிங் டுகெதர் அதேநேரத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு சில நடிகைகளுடன் ஏற்பட்ட நெருக்கமே அவர்களின் திருமண முறிவுக்கு காரணம் என்றும் தற்போது இணையத்தில் தற்போது சிசுசிசுக்கப்படுகிறது. சமந்தாவை காதலித்த போதே அவரையும் காதலித்ததாகவும் தகவல் பரவி வருகிறது.

பிரேமம் ரீமேக்கின் போது அதாவது நாக சைதன்யா, சமந்தாவை திருமணம் செய்வதற்கு முன்பு நடிகை ஸ்ருதி ஹாசனுடன் லிவிங் டுகெதரில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பிரேமம் ரீமேக் படத்தில் நடித்த போது ஒன்றாக ஊர் சுற்றிய போட்டோக்களும் இணையத்தில் கசிந்து வைரலானது. 


 இந்நிலையில் நடிகை சமந்தாவையும் நடிகை ஸ்ருதி ஹாசனையும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் தெரியாமல் நாக சைதன்யா காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு நாக சைதன்யாவின் பிறந்த நாளுக்கு ஸ்ருதி ஹாசனும் சமந்தாவும் வாழ்த்து கூறியதும், அவர்களுக்கு நாக சைதன்யா பதில் கூறியதும் தற்போது வைரலாகி வருகிறது. பூஜா ஹெக்டேவுடன் கிசுகிசு பின்னர் சில காரணங்களுக்காக ஸ்ருதி ஹாசனை பிரிந்த நாக சைதன்யா, சமந்தாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவையும் பிரிந்துள்ளார் நடிகர் நாக சைதன்யா. ஏற்கனவே நடிகர் நாக சைதன்யா, நடிகை பூஜா ஹெக்டேவுடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நாக சைதான மீதான இந்த விமர்சனம் தெலுங்கு திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.