இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா..! பெற்றோரிடம் போட்ட கண்டிஷன் என்ன?

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா..! பெற்றோரிடம் போட்ட கண்டிஷன் என்ன?

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா இரண்டாவதாக திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அதற்கு அவர் ஒரு கண்டிஷன் விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். கடந்த 2017ஆம் ஆண்டு ஜோடி சேர்ந்த இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு தங்கள் 4 வருட காதல் திருமணத்தை முடித்துக்கொண்டனர். இவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கும் திரையுலக பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இருப்பினும் சமந்தா - நாக சைதன்யா இருவரும் ஒன்றிணைந்திருவார்கள் என்று நினைத்திருந்த ரசிகர்களின் ஆசையும் பொய்யானது.

இந்நிலையில் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி அவ்வப்போது ஊடகங்களில் கசிந்து வரும் நிலையில் தற்போது பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இரண்டாவது திருமணத்திற்கு நாக சைதன்யா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் நாக சைதன்யா பெற்றோருக்கு கண்டிஷன் ஒன்றை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது தான் திருமணம் செய்யப் போகும் பெண் நடிகையாக இருக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த முறையான அறிவிப்பை அவரது பெற்றோர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com