நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தின் டீசரை வெளியிட்டது ஓடிடி நிறுவனம்...!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தின் டீசரை வெளியிட்டது ஓடிடி நிறுவனம்...!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது ஓடிடி நிறுவனம். 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா: 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகை என்றால் அது நயன்தாரா தான்.  இடை இடையே சினிமாவை விட்டு வெளியே சென்று மீண்டும் திரையில் தோன்றினாலும் தனது அயராத உழைப்பாலும், எதார்த்த நடிப்பாலும் மக்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் நயன்தாரா. 

விக்னேஷ்சிவன்-நயன்தாரா காதல்: 

2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது, அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது நயனுக்கு காதல் பற்றிக் கொண்டது. பிறகு இருவரும் கிட்டத்தட்ட 6 வருடத்திற்கும் மேலாக லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்தனர். சென்னையில் ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்த போதிலும், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று கேரியரையும், காதலையும் ஒருசேர வளர்த்து வந்தனர். 

திருமணம்: 

பல இடர்பாடுகள், ஏச்சு பேச்சுகளை தாண்டி பெரியளவில் வெளியே தெரியாத வண்ணம், தங்களது திருமணத்தை பிளான் செய்தனர் இருவரும். திருப்பதியில் நடைபெறுவதாக இருந்த திருமணம் சில பல காரணங்களால் சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் ஒரு தனியார் ரெசார்ட்டில் பிரம்மாண்டமாக கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. 200 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். 

திருமணத்தை வாங்கிய ஓடிடி தளம்: 

இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோவின் வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி தளம் 25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவர்களது திருமணத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் ஒரு படத்தை போலவே இயக்கி இருந்தார். 

விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்கள்: 

இதனால் விக்னேஷ் சிவன் அவ்வப்போது வெளியிட்ட திருமண புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் தீயாய் பரவி வந்தது. எப்போது இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியே வரும் என ரசிகர்கள் காத்து கிடந்தனர். 

ஓடிடி தளத்தின் அதிருப்தி: 

நயன்தாராவின் திருமணத்தில் விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா தவிர்த்து வேறு எந்த ஹீரோக்களும் கலந்து கொள்ளவில்லை. இவர்களது புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் வெளியிட்டதால், ஓடிடி நிறுவனம் நயன்தாராவின் திருமணத்தை வெளியிடுவதில் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியானது.

பீச் போட்டோக்கள் வெளியீடு:

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண புகைப்படங்கள் வெளியே வரும் என்று ரசிகர்கள் காத்து இருந்த நிலையில், சமீபத்தில் ஓடிடி நிறுவனம் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டை வெளியிட்டது.  அந்த புகைப்படத்தில்  நயன் - விக்னேஷ் இருவரும் கடற்கரையில் நின்றவாறு போஸ் கொடுத்திருப்பார்கள். அந்த பீச் போட்டோக்கள் அனைத்தும்  இணையத்தில் மிக வைரலாகி வந்தது.

திருமண டீசரை வெளியிட்ட ஓடிடி தளம்:

நயன் - விக்னேஷ் சிவனின் பீச் போட்டோக்களை வெளியிட்ட ஓடிடி நிறுவனம், இன்று திருமண டீசரை வெளியிட்டுள்ளது. அந்த டீசரில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. வேலையை மட்டுமே நான் நம்புவேன்: என்னை சுற்றி நிறைய அன்புகள் இருப்பது தெரியும் என்று நயந்தாரா கூறுகிறார். அதேபோன்று, ஒரு பெண்ணாக அவர் மனதளவில் அழகானவர் என்று பெருமையாக நயன் குறித்து விக்னேஷ் சிவன் கூறியிருப்பது வீடியோவிற்கே அழகு சேர்ப்பதாக இருக்கிறது. தற்போது இந்த திருமண டீசர் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Netflix_INSouth/status/1556877022592258048