ஒரே கலர் டி சர்ட்டில் கொண்டாட்டம்.. ஓமனா குரியனுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன்

ஒரே கலர் டி சர்ட்டில் கொண்டாட்டம்.. ஓமனா குரியனுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன்

நயன்தாரா தனது அம்மாவின் பிறந்தநாளை தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 5  வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். அவ்வப்போது  இருவரும் தனி ஜெட்டில் பயணிப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வரும். சமீபத்தில் தந்தைக்கு உடல்நலமில்லாததால் கேரளாவுக்கு தனது காதலருடன் சென்றார் நயன்தாரா.

தற்போது அல்போன்ஸ் புத்திரனின் கோல்ட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ளார் நயன்தாரா. முழுவீச்சில் கோல்ட் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று தனது அம்மாவின் பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அம்மாவுடன் தானும், விக்னேஷ் சிவனும் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.