ஷிவாணியை கமெண்ட்ஸில் மோசமாக திட்டி தீர்க்கும் ரசிகர்கள்...எதுக்கு தெரியுமா?

ஷிவாணியை கமெண்ட்ஸில் மோசமாக திட்டி தீர்க்கும் ரசிகர்கள்...எதுக்கு தெரியுமா?
Published on
Updated on
2 min read

பகல் நிலவு சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவாணி நாராயணன். தன்னுடையை நடிப்பு மூலம் குறுகிய காலத்திலேயே  ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

அதன்பின்னர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான இவருக்கு திடீரென அடித்தது யோகம். ஆமாங்க, ஷிவாணிய தேடி பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி ஆக்ட்டிவாக இருக்கும் ஷிவாணி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், பிரபல பாடல்களுக்கு நடமாடும் வீடியோவையும் பகிர்ந்து வருவார்.

இந்த வீடியோக்கள் வலைதளங்கள் முழுவதும் பரவி வட்டமிட்டு வந்தன. இந்தநிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலுக்கு அப்படி ஒரு ஆட்டம் போட்டுருக்காங்க ஷிவாணி நாராயணன்,

அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் ஷிவாணி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஆனால் இதுவரை வெளியான பிரபலங்களின் அரபிக்குத்து பாடல் வீடியோக்களில் இந்த வீடியோவுக்கு தான் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பல நெட்டிசன்கள் ஷிவானியின் நடனத்தை கேலியும் கிண்டலும் செய்து கமெண்ட்ஸ் பதிவு செய்தாலும் ஒரு சிலர் அவரது நடனத்தை பாராட்டியும் கமெண்ட் செய்துள்ளனர். என்னதான் இந்த நடனத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும், மறு பக்கம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com