வெளியானது தி லெஜெண்ட் திரைப்படத்தின் புது கன்னட ட்ரைலர்!

தி லெஜெண்ட் திரைப்படத்தின் புது கன்னட ட்ரைலர் இன்று மாலை 4  மணிக்கு வெளியானது!

வெளியானது தி லெஜெண்ட் திரைப்படத்தின் புது கன்னட ட்ரைலர்!

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த தி லெஜெண்ட் சரவணன் தற்போது தி லெஜெண்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி & ஜெர்ரி தி லெஜெண்ட் ப்ரோடுக்க்ஷன்ஸ் தயாரிப்பில் இந்த படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள படத்தின் இசை உரிமையை  திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தில் தி லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டலா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில், பிரபு, விவேக், மயில்சாமி, நாசர், தம்பி ராமைய்யா, சுமன், ராய் லட்சுமி, ரோபோ சங்கர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. பல நாட்களுக்குப் பிறகு திரையுலகில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களுக்கு, வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் ஆகியோர் வரிகளை எழுதியுள்ளனர். மேலும் படத்தில் இருந்து மொசலோ மொசலு பாடலும், வாடி வாசல் பாடலும், போ போ போ பாடலும், வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த மே மாதம் 29 ம் தேதி படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.  

தி லெஜெண்ட் திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் ஜூலை 28 ம் தேதி பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் சுமார் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தி லெஜெண்ட் சரவெடி என்ற தலைப்பில் படத்தின் புது ட்ரைலர் தமிழ், ஹிந்தியில் வெளியான நிலையில், தி லெஜெண்ட் படத்தின் புது தெலுங்கு ட்ரைலர் நேற்று வெளியானது. இது தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது. 

இந்நிலையில், தற்போது தி லெஜெண்ட் சரவெடி தலைப்பில் கன்னட படத்தின் புது ட்ரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்கள் படத்திற்காக காத்திருப்பதாகவும், தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.