நித்தம் ஒரு வானம்- அழகான காதல் கதையா? இல்லை பழைய வடையா?

நித்தம் ஒரு வானம் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நித்தம் ஒரு வானம்- அழகான காதல் கதையா? இல்லை பழைய வடையா?

அஷோக் செல்வன் கதைகள் என்றால், ஒரு எதார்த்தத் தன்மை இருக்கும் என்ற பிம்பம் உருவாகிய நிலையில், அவரது படங்களுக்கான எதிர்பாரா ரசிகர் கூட்டம் ஒன்று இருக்கிறது. அஷோக் செல்வனின் நடிப்பு மற்றும் கதை தேர்வை மட்டுமே நம்பி போகும் அந்த கூட்டம் இது வரை ஏமாற்றத்துடன் திரும்பியதே இல்லை. இந்நிலையில், தற்போது அவரது புதிய படம் ஒன்றின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.

ரா. கார்த்திக் இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் இணை தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் தான், “நித்தம் ஒரு வானம்”. அஷோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் இருக்கின்றனர். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் சிவாத்மிகா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படமானது ஒரு அக்மார்க் காதல் கதையாக வெளியாக இருக்கிறது என்று டீசரில் இருந்து தெரிகிறது.

மேலும் படிக்க | சமந்தாவின் கண் பறிக்கும் அழகில் மயங்கும் இளைஞர்கள்!

Ritu Varma, Aparna Balamurali, Shivathmika Rajashekar's looks from Nitham  Oru Vaanam out- Cinema express

‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டு கதாநாயகிகளுடன், ஒரு மிதமான காதல் கதையைக் கொடுத்த அஷோக் செல்வன், இந்த படத்தில் ஏதேனும் புதுமையைக் கொண்டு வருவாரா, அல்லது, அதே பழைய வடை போல, முன்னாள் காதலை பற்றி கூறி, மற்றொரு பெண்ணை உஷார் செய்கிறாரா, என ரசிகர்கள் கேள்விகளை பதிவுகளாக போட்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி, ஒரு சிலர், கதை மூன்று வித்தியாசமான கால கட்டங்களில் நடப்பதோடு, முன் ஜன்ம நியாபகங்கள் போன்றவற்றை கதை களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் கேள்விகள் டீசர் மூலம் உருவாகியுள்ளன. வருகிற நவம்பர் படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது துவங்கியுள்ளது என்றே சொல்லலாம்.