கிளிமஞ்சாரோ மலையில் நிவேதா தாமஸ்... வைரல் புகைப்படம்

உலகில் உயரமான சிகரங்களில் ஒன்றான கிளிமாஞ்சாரோவில் நின்று நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிளிமஞ்சாரோ மலையில் நிவேதா தாமஸ்... வைரல் புகைப்படம்
Published on
Updated on
1 min read

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதிதா தாமஸ், தற்போது வெள்ளித்திரையிலும் முண்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். 

கோலிவிட்டில் இவர் போராளி, நவீன சரஸ்வதி சபதம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து விஜயின் ஜில்லா, கமலின் பாபநாசம், ரஜினியின் தர்பார் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். என்ன தான் நிவேதிதாவை சிறிய வயதில் முதலே திரைத்துறையில் வலம் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இவரால் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும்  நிவேதிதா தாமஸ் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். இந்நிலையில் 
உலகில் உயரமான சிகரங்களில் ஒன்றான கிளிமாஞ்சாரோவில்  நின்று புகைப்படம் ஒன்றை நிவேதா வெளியிட்டுள்ளார்.

இந்த சிகரத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமே ஏற முடியும். ஆனால், நிவேதிதா தாமஸ் ஆறுமாதக் தீவிர பயிற்சிக்குப் பின், ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலையான 5.895 அடி மீட்டர் கொண்ட கிளிமஞ்சாரோ மலையில் ஏறியுள்ளார். இதற்கு திரைபிரலபங்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com