மூன்று வருடம் கழித்து சும்மா மாஸா வெளியான சூப்பர் ஸ்டாரின் ’இன்னொரு டீ சாப்பிடலாமா’ வீடியோ காட்சி!!

மூன்று வருடங்கள் கழித்து வெளியான Deleted காட்சி....

மூன்று வருடம் கழித்து சும்மா மாஸா வெளியான சூப்பர் ஸ்டாரின் ’இன்னொரு டீ சாப்பிடலாமா’ வீடியோ காட்சி!!

தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில்  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  உருவான ‘பேட்ட’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீசானது. இந்த படம் ரூபாய் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்தது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் ரிலீஸாகி இன்றுடன் மூன்று வருடங்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் டெலிட் செய்யப்பட்ட ’இன்னொரு டீ சாப்பிடலாமா’ என்ற வீடியோ காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.  இந்த காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில், ரஜினிகாந்த் டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது விஜய் சேதுபதி தனது குழுவினருடன் வரும் காட்சியும், ரஜினியுடன் இருப்பவர் நாம் சென்று விடலாம்’ என்று கூற, அதற்கு ரஜினி ஸ்டைலாக ’இன்னொரு டீ சாப்பிடலாமா’ என்று கூறும் காட்சிகளும் உள்ளன. இந்த மாஸ் காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் ஏன் இந்த காட்சியை டெலிட் செய்தார்கள் என்ற கேள்வி எழும்பியுள்ளது.