கோவாவில் பிரபல பெண் நடன இயக்குனர் மரணம் - எப்படி தெரியுமா? திரையுலகினர் அதிர்ச்சி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் திடீரென மரணமடைந்தது திரையுலகினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் பிரபல பெண் நடன இயக்குனர் மரணம் - எப்படி தெரியுமா? திரையுலகினர் அதிர்ச்சி

டோலிவுட் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் தான் டினா சிது. சமீபத்தில் இவர் கோவா சென்றிருந்தார். அங்கு டினா சிதுவுக்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரது மரணம் குறித்து சகல நடன இயக்குனர்களும், தெலுங்கு திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நடன இயக்குனர் டினாவின் நெருங்கிய நண்பரான சந்தீப் என்பவர், தனது சமூக வலைத்தளத்தில் டீனாவுடன் இருந்த புகைப்படங்களை பதிவு செய்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் டீனா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் மிகச்சிறந்த நடன இயக்குனர்களில் ஒருவர் என்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் சந்தீப் தெரிவித்துள்ளார்.

என்னதான் டினா சிது மாரடைப்பால் உயிரிழந்தார் என்று கூறப்பட்டாலும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

 

View this post on Instagram

A post shared by


’விக்ரம்’ பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பெயரை கேட்டதுமே சும்மா அதிர்ந்த அரங்கம்..! கமல் கொடுத்த ரியாக்சன் என்ன?

’விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியபோது அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் கத்தியதற்கு கமல்ஹாசன் கொடுத்த ரியாக்சன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக விளங்குபவர் நடிகர் கமலஹாசன். தனது கடின உழைப்பால் தசவதாரம் போன்ற ஹிட் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். உலக நாயகன் என்று அழைக்கப்படும் இவரின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், பா.ரஞ்சித், சிம்பு, உதயநிதி, விஜய் சேதுபதி, அனிருத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் கலந்துக்கொண்டு சிறப்பு வகித்தனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், விஜய் குறித்து பேச ஆரம்பித்தார். நடிகர் விஜய்யின் பெயரை அவர் சொன்னதும், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷமிட்டு கத்தினர். உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தினரை அமைதியாக இருக்கச் சொன்ன போதிலும் அரங்கம் அதிரும் அளவுக்கு தொடர்ந்து கரகோஷம் இருந்துகொண்டே இருந்தது.  

 

இதனையடுத்து நடிகர் கமல் கூட்டதினரை பார்த்து அமைதியாக இருக்க சொன்ன சில நிமிடங்களுக்கு பிறகே கரகோஷங்கள் அமைதியானது. இதிலிருந்தே தளபதி விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மாஸ் என்னவென்பது தெரிய வருகிறது. மேலும் இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

உதயநிதியின் ”நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை பார்த்த முதல்வர் முக ஸ்டாலின்; படக்குழுவினருக்கு சொன்னது என்ன?

”நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பாடகராகவும், பாடலாசிரியராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் அருண் ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான படம் “நெஞ்சுக்கு நீதி”.  Zee Studios - போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வருகிற 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார், அதுவும் போலீஸ் கெட்டப்பில் சிறப்பாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போனி கபூர் ஆகியோர் இணைந்து “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

 

பிற பாடல்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது - நடிகர் கமலின் பததல பத்தல பாடல்!!

அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியிருக்கும் பத்தல பத்தல பாடல் வெளியாகி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விக்ரம். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பத்தல பத்தல பாடலானது சென்ற 11 ஆம் தேதியில் வெளியானது. ரசிகர்கள் மத்தில் மிகப்பெரிய அளவிலான வரவேற்ப்பையும் பெற்றது. இதன் இடையில் இப்பாடலின் வரிகளில் அரசியல் சார்ந்த விமர்சனங்கள் இருப்பதாக சர்ச்சைகளும் எழுந்து வந்தன.

 

இருப்பினும் இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இப்பாடல் வெளியாகி இரு நாட்களிலேயே 2 கோடி பார்வையாளர்களை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் இப்பாடல் வலம் வந்து கொண்டிருக்கிறது. பாடல் வெளியான கணம் முதலே , முதல் இடத்தை பிடித்து நின்று வருகிறது. 

“இந்தி ஒழிக என சொல்வது என் வேலை அல்ல! - தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை” - கமல்ஹாசன் பேச்சு!!

விக்ரம் பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசியது சமூக வலைத்தளத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தின் முதல் பாடலாக “பத்தல பத்தல” பாடல் வெளியாகி மக்கள் ஆண்டவர் களமிறங்கி விட்டார் என்ற அளவிற்கு வைரலாக்கி வரவேற்பை அள்ளித்தந்து வருகின்றனர். இதன் இடையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவானது நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இவ்விழாவில் இதில் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழ் வாழ்க என சொல்வது எனது கடமை அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் இதற்கும் அரசியலுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என்றார். தாய் மொழியை விட்டுவிடாதீங்க. இந்தி ஒழிக என சொல்வது எனது வேலையில்லை.ஆனால் தமிழ் வாழ்க வாழ்க என சொல்வடேஎ எனது கடமை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தனமை என்றார். 

 

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா அதற்கு நான் காரணமல்ல நீங்கள் தான் யாவரும் இங்கு முழுநேர அரசியல்வாதியாக அல்ல. நான் முதல் முதலாக அரசியலுக்கு வருகிறேன் என்ற செய்தியை கேட்டுவிட்டு டி.ஆர் என்னைத் தேடி வந்து எதற்காக இந்த முடிவு என தேம்பி அழுந்து எனது சட்டையை நனைத்து விட்டார்.அரசியல் களத்தில் புதிதாக நாகரீகததி வளர்க்க வேண்டும் என நினைத்தேன், இப்பொழுது வரவில்லை என்றால் பிறகு எப்பொழுது. எனது தமிழின் உச்சரிப்புக்கு காரணம் மூவர் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன் என்றார். தாத்தாவுடனான தொடங்கிய பயணம் தற்போது பேரன் உதயநிதி வரை தொடர்ந்து வருகிறது. இந்தப்படத்தை ரெட் ஜெயிண்ட் வெளியீடுகிறார்கள், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் எனது நண்பர் எப்படி என கேட்கிறீர்களா? ஏன் நானும் ரஜினிகாந்தும் போட்டியாளர்களாக இருந்து கொண்டு நண்பர்களாக இல்லையா! அதுபோல தான் எனக் கூறியிருக்கிறார்.   

பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் அவித்த முட்டை போன்று இருக்கின்றனர்.! பிரபல நடிகையின் சர்ச்சை கருத்து!!

பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் அவித்த முட்டை போன்று இருப்பதாக பிரபல நடிகை ஒருவர் விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையும், சர்ச்சைக்கு பேர் போனவரும் தான் நடிகை கங்கனா ரனாவத். சமூக வலைதளங்களிலும் சரி, பேட்டிகளிலும் சரி, பொது மேடைகளிலும் சரி சர்ச்சைக்குரிய வகையில் அவ்வப்போது பேசுபவர் நடிகை கங்கனா ரணவத். தமிழில் ‘தலைவி’ திரைப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபத்திரத்தை மிக சிறப்பாக நடித்திருந்த இவர், ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் ரசிகர்களோடு ஒன்றிணைய முடியவில்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர்கள் வெளிநாட்டில் படித்து, ஆங்கிலம் மட்டுமே பேசி, ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்த்து வளர்கின்றனர். பின் திடீரென பாலிவுட் படங்களில் நடிப்பதால் அவர்கள் ரசிகர்களுடன் ஒன்றிணைய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் தென்னிந்திய சினிமாக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றும், தென்னிந்திய ஹீரோக்கள் ரசிகர்களோடு ரசிகர்களாக இருக்கின்றார்கள் என்றும், அதனால்தான் பாலிவுட் படங்களை விட தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.

 

அத்துடன் பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் அவித்த முட்டை போன்று இருக்கிறார்கள் என்றும், நான் யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டும் என்று கூறவில்லை என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் குறித்து இவரின் விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.