பௌத்தம் ஏற்போம்! சமத்துவத்தை உண்டாக்குவோம்: அம்பேத்கார் நினைவு நாளில் பா.ரஞ்சித் ட்விட்!!..

இயக்குநர் பா. ரஞ்சித் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில் பௌத்தம் ஏற்போம்! சமத்துவத்தை உண்டாக்குவோம் என பதிவிட்டுள்ளார். 
பௌத்தம் ஏற்போம்! சமத்துவத்தை உண்டாக்குவோம்: அம்பேத்கார் நினைவு நாளில் பா.ரஞ்சித் ட்விட்!!..
Published on
Updated on
1 min read

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 65-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


அம்பேத்கர் தம் வாழ்நாளின் இறுதியில் இந்து மதத்தில் இருந்து வெளியேறி பெளத்த மதத்தைத் தழுவினார். 1956-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி பல லட்சக்கணக்கான மக்களுடன் பெளத்த மதத்தை அம்பேத்கர் தழுவினார்.  அம்பேத்கரை பின்பற்றுகிறவர்கள் இன்றளவும் பெளத்த மதத்தைத் தழுவியோ அல்லது ஏற்றுக் கொள்கிறவர்களோ இருக்கின்றனர். இந்த பின்னணியில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இன்று அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில், பௌத்தம் ஏற்போம்! சமத்துவத்தை உண்டாக்குவோம் என பதிவிட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com