' வருகிறான் சோழன் ' பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா....?

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா...

' வருகிறான் சோழன் ' பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா....?

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன்- 1 திரைப்படம் பல நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம். 1950 களில் ஒரு பத்திரிகை தொடராக வெளிவந்த கல்கியின் புகழ்பெற்ற நாவல் தான் பொன்னியின் செல்வன். இந்த நாவலை அடிப்படையாக கொண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம். 

லைக்கா ப்ரோடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் அவர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களையும் படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்துள்ளனர்.   

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என பல மொழிகளில்  வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஜூலை 8 ம் தேதி  சென்னை டிரேட் சென்டரில் நடைப்பெற்றது. 

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வருகிற செப்டம்பர் 6 ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில், நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் இரண்டு பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வரௌவதை அடுத்து, படத்திற்கான எதிர்பார்ப்பு, மக்களிடையே அதிரித்து வருகிறது என்றே சொல்லலாம்.

அதுமட்டுமின்றி, ஐ-மேக்ஸ் ஃபார்மேட்டில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையும் இந்த பொன்னியின் செல்வன் 1-க்கு வந்துள்ளது. ஐ-மேக்ஸ் ஃபார்மேட்டில், சமீபத்தில் வெளியான, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 2 ஆகிய தென்னிந்திய படங்கள் உலகளவில் வெளியாகி இருந்தாலும், தமிழ் படம் இது வரை இந்த பட்டியலில் இது வரை இடம்பிடிக்காத குறையை, பொன்னியின் செல்வன் 1, நிரையாக்குகிறது என்று தான் கூற வேண்டும்.

விக்ரம் நடிப்பில், சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கோப்ரா படத்தைத் தொடர்ந்து, அவர் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 1-ற்காக, சினிமா ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர் என்று கூறுவது மிகையாகாது.