
உலகின் மிகப்பெரிய பணக்காரரில் ஒருவரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் சமீபத்தில் 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கியுள்ளார்.
இதனையடுத்து ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனம் கைமாறியதை குறித்து பேசியுள்ளார். அதில், ‘இனி ட்விட்டருக்கு இருண்ட காலம் என்றும் இதற்குபிறகு என்ன வேண்டுமானாலும் ட்விட்டரில் நடக்கலாம்’ என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமீல் தனது ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனம் கைமாறியதை அடுத்து தனது ட்விட்டர் கணக்கிலிருந்து விலகுவதாக அறிவித்த நடிகை கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘எனது கடைசி ட்விட் இதுதான்’ என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய உடன் திடீரென பிரபல நடிகை ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.